பங்களாதேஷ் டெஸ்ட் அணித் தலைவர் பதவியிலிருந்து ஹொசெய்ன் ஷன்டோ விலகல்

இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 0 – 1 என்ற ஆட்டம் வித்தியாசத்தில் தோல்வி அடைந்ததை அடுத்து பங்களாதேஷ் டெஸ்ட் அணித் தலைவர் பதவியிலிருந்து நஜ்முல் ஹொசெய்ன் ஷன்டோ விலகிக்கொண்டுள்ளார்.

இலங்கைக்கும் பங்களாதேஷுக்கும் இடையில் எஸ்.எஸ்.சி. விளையாட்டரங்கில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி முடிவில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது தனது முடிவை ஷன்டோ அறிவித்தார்.

அப் போட்டியில் இலங்கையிடம் ஓர் இன்னிங்ஸ் மற்றும் 78 ஓட்டங்களால் பங்களாதேஷ் தோல்வி அடைந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *