சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற வேனின் சாரதி மீது குளவிக்கொட்டு

நுவரெலியா ஹட்டன் பிரதான வீதியில் நானுஓயா ரதல்ல குறுக்கு வீதியில் இன்று(06) பிற்பகல் இந்திய நாட்டினரை ஏற்றிச் சென்ற வேனின் சாரதி குளவிக் கொட்டுக்கு இலக்காகியுள்ளதாக நானுஓயா பொலிஸார் தெரிவித்தனர்.

 

கொழும்பிலிருந்து நுவரெலியாவுக்கு நான்கு இந்திய சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற போது, நானுஓயா ரதல்ல குறுக்கு வீதியில் இந்திய நாட்டினரைச் சேர்ந்த ஒரு குழுவினர் வேனில் இருந்து இறங்கி புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்தபோது வீதியோரத்தில் அருகில் ஒரு மரத்தில் கட்டப்பட்டிருந்த குளவிக்கூடு கலைந்து இந்தியக் குழுவினரை துரத்தியபோது அவர்களைப் பாதுகாப்பாக வேனில் ஏற்றிய சாரதி, இறுதியாக சாரதி இருக்கையில் ஏறும் போது குளவிக் கொட்டுக்கு இலக்கானதாக நானுஓயா பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

 

சம்பவம் குறித்து தகவல் கிடைத்தவுடன் நானுஓயா பொலிஸ் அதிகாரிகள் சம்பவ இடத்திற்குச் சென்று சம்பவ இடத்தை ஆய்வு செய்ததன் பின்னர் குளவித் தாக்குதலுக்கு உள்ளான சாரதி தனது உடல்நிலை மோசமாக இல்லை என்றும், சிகிச்சைக்காக நுவரெலியாவுக்குச் செல்வதாகவும் கூறியதை அடுத்து, நானுஓயா பொலிஸார் இந்திய குழுவை அதே வேனில் நுவரெலியா வரை பொலிஸ் பாதுகாப்புடன் அனுப்பி வைக்க நடவடிக்கை எடுத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *