பருத்தித்துறையில் இதுவரை இயங்கிவந்த மரக்கறிச்சந்தைக்கு பருத்தித்துறை நகரசபையால் பூட்டுப் போட்டு பூட்டப்பட்டுள்ளது.
பருத்தித்துறையில் இதுவரை இயங்கிவந்த மரக்கறி சந்தையை சுமார் 200 அருகில் அமைக்கப்பட்ட புதிய கட்டிடத்திற்கு மாற்றுவதற்காக நேற்றைய தினம் அறிவித்தல் ஒட்டப்பட்டிருந்தநிலையில் புதிய கட்டிடத்திற்கு இடம்மாற்றம் செய்யப்பட விருந்தது.
இன்றைய தினம் மரக்கறி வியாபரிகள் வியாபரத்தை பகிஷ்கரிப்பதாக அறிவித்திருந்த நிலையில் இன்று அதிகாலையில் இருந்து நேற்றுவரை இயங்கிவந்த சந்தை கட்டிடம் நகரசபையால் பூட்டு போட்டு பூட்டப்பட்டுள்ளது.
பருத்தித்துறை நகரசபையால் நேற்றைய தினம் திடீரென அறிவித்தல் ஒட்டப்பட்டும், ஒலிபெருக்கி மூலம் அறிவிக்கப்பட்டும் இன்றைய தினம் மரக்கறி சந்தையை புதிய கட்டிடத்திற்கு இடமாற்றம் செய்யுமாறு அறிவிக்கப்பட்டமையால் அதிகமான மரக்கறி வியாபாரிகள் வியாபாரம் நடவடிக்கையிலிருந்து விலகியிருப்பதுடன் சில வர்த்தகர்கள் புதிய கட்டிட தொகுதியில் வியாபரத்தை மேற்கொண்டு வருகின்றனர்.
புதிய மரக்கறி சந்தை அமைந்துள்ள பகுதி இயங்கி வந்த நிலையில் சந்தையிலிருந்து சுமார் 200 M தொலைவில் உள்ளது அவ் வீதியில் சந்தைக்கு செல்கின்ற போது போக்குவரத்து நெரிசல், தரிப்பிட வசதி குறைவுகள் ஏற்கனவே உள்ளமை குறிப்பிடதக்கது.

