கிளிநொச்சியில் டிப்பர் வாகனத்தின் மீது மீது பொலிஸாரால் துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் நேற்று(07) இரவு இடம்பெற்றுள்ளது.
இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், கிளிநொச்சி – தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்லாறுப் பகுதியில் பயணித்த டிப்பர் மீதே இவ்வாறு துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
இரவு 9.30 மணியளவில் மணல் ஏற்றிய டிப்பர் வாகனத்தை புளியம்பொக்கனை சந்தியில் வைத்து பொலிஸார் மறித்து சோதனை செய்ய முற்பட்டுள்ளனர்.
இதன்போது பொலிஸாரின் சமிக்ஞையை மீறி சென்ற டிப்பர் வாகனம் சென்ற நிலையில், பொலிஸாரினால் துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பொலிஸாரின் துப்பாக்கிப் பிரயோகத்தில் டிப்பர் வாகனம் நிறுத்தப்பட்ட நிலையில், வாகன சாரதி தப்பியோடியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதையடுத்து, மணல் மற்றும் டிப்பர் வாகனத்தை மீட்ட காவல்துறையினர் சாரதியை தேடி வருவதுடன் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.


