தர்மபுரத்தில் தேன் எடுக்கச் சென்றவர் சடலமாக மீட்பு 

குமாரசாமிபுரம் பகுதியில் நேற்று(07) மாலை 5 மணி அளவில் தேன் எடுப்பதற்காக சென்றவர் தேனெடுப்பதற்காக மரத்தில் ஏறிய போது மரத்திலிருந்து தவறி விழுந்த நிலையில் உறவினர்களின் உதவியுடன் சிகிச்சைகளுக்காக தர்மபுரம் வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற பொழுது வைத்தியர் அவர் ஏற்கனவே இறந்துள்ளார் என தெரிவித்தனர்.
குமாரசாமிபுரம் பகுதியைச் சேர்ந்த பெருமாள்துர ராசா எனும் 51 வயதுடைய நான்கு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன் பிரேத பரிசோதனைகளின் பின்னர் இறந்தவரின் சடலத்தினை  உறவினர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக தர்மபுரம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *