யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு மாமுனைபகுதியில் கடந்த 07ம் திகதி இரவு 10:30 மணியளவில் பெருந்தொகையான கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளது
இந்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது,
புலனாய்வுத் துறையினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் முல்லைத்தீவு விசேட அதிரடிப் படையினரால் ஓர் விசேட சுற்றிவளைப்பு ஒன்று செம்பியன்பற்று தெற்கு பகுதி முழுவதும் மேற்கொள்ளபட்டது.
இச் சுற்றிவளைப்பில் 8 பொதிகள் அடங்கிய 15.795 கிலோ கிராம் கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளதுடன் சந்தேக நபரும் தப்பிச் சென்றுள்ளார்.
மீட்கப்பட்ட கேரள கஞ்சா மருதங்கேணி பொலிஸ் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மருதங்கேணி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

