வவுனியா கூமாங்குளம் பகுதியில் தமிழ் இளைஞரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதுடன் சம்பவ இடத்திலிருந்து பொலிஸாரின் பெயர் பட்டியும் மீட்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து அங்கு பதற்ற நிலை ஏற்பட்டமையால் அப்பகுதியில் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, வவுனியா கூமாங்குளம் பகுதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞரை பொலிஸார் தடுத்து நிறுத்த முயன்ற போது விபத்து ஏற்பட்டதாக தெரியவருகிறது.
இருப்பினும் அவ்விடத்தில் பொலிஸாரின் பெயர் பட்டி மீட்கப்பட்டுள்ளது.இருப்பினும் இறப்புக்கான காரணம் இன்னும் தெரியவரவில்லை.
இச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

