பாகிஸ்தான் இராணுவத் தளபதி இலங்கைக்கு விஜயம்

பாகிஸ்தான் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சையத் அசிம் முனீர் திங்கட்கிழமை (21) இலங்கை மற்றும் இந்தோனேசியாவிற்கு விஜயம் செய்யவுள்ளதாக பாகிஸ்தானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இலங்கை விஜயத்திற்குப் பின் பீல்ட் மார்ஷல் சையத் அசிம் முனீர் இந்தோனேசியாவிற்கும் விஜயம் செய்யவுள்ளார்.

இரு நாடுகளின்  வருகைகளின் போதும், இருதரப்பு நலன் சார்ந்த விடயங்கள் தொடர்பில் அதிகாரிகளுடன் கலந்துரையாடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *