வவுனியா மாநகர சபையின் புதிய ஆணையாளர் பொ.வாகீசன் இன்று(17) தனது கடமைகளை உத்தியோகப்பூர்வமாக பொறுப்பேற்றார்.
வவுனியா நகரசபையாக இருந்து மாநகர சபையாக தரமுயர்த்தப்பட்டுள்ள நிலையில் அதன் ஆணையாளராக இதுவரை வவுனியா பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளர் தெ. ரதீஸ்வரன் செயற்பட்டிருந்தார்.
இந்தநிலையில் புதிய ஆணையாளராக, வட மாகாண மகளிர் விவகாரம் மற்றும் கூட்டுறவு அமைச்சின் செயலாளராக இதுவரை கடமையாற்றிய பொ. வாகீசன் நியமிக்கப்பட்டுள்ளார்.
வட மாகாண ஆளுநர் நா. வேதநாயகத்தினால் இந்த நியமனம் நேற்று வழங்கப்பட்டுள்ளது.
அதற்கமைய புதிய ஆணையாளர் இன்று தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டார்.

