மட்டக்களப்பு தலைமையகப் பொலிஸ் பிரிவிலுள்ள புதிய எல்லை வீதியில் போதை வியாபாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த ஆரையம்பதியைச் சேர்ந்த 22 வயது இளைஞனை 2 கிராம் 170 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளுடன் நேற்று முன்தினம்(19) இரவு கைது செய்துள்ளதாக பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பிரியந்த பண்டார தெரிவித்தார்.
பொலிஸாருக்குக் கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து கடந்த புதன்கிழமை சீலாமுனை பகுதியில் வைத்து தலா 210, 140, 180 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளுடன் 3 இளைஞர்களை கைது செய்தனர்.
இவர்களை 7 நாள் பொலிஸ் தடுப்புக் காவலில் வைத்து விசாரணை செய்ய நீதிமன்றத்தில் அனுமதியைப் பெற்று இவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் குறித்த போதைப்பொருள் வியாபாரி தொடர்பாக தகவல்களை வழங்கினர்.
இதனையடுத்து பொலிஸ் போதைத்தடுப்பு ஊழல் ஒழிப்புப் பிரிவுப் பொறுப்பதிகாரி தலைமையிலான பொலிஸார் மாறுவேடத்தில் புதிய எல்லை வீதியில் சம்பவதினத்தன்று இரவு கண்காணிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
இதன்போது அங்கு வியாபாரத்துக்காக ஐஸ் போதைப்பொருளை எடுத்து வந்த இளைஞனைக் கண்ட பொலிசாஸார் சுற்றிவளைத்து கைது செய்து வியாபாபரியிடம் இருந்து 2 கிராம் 100 மில்லிக்கிராம் ஐஸ் போதைப்பொருளை மீட்டனர்.

