மன்னார் – விடத்தல்தீவு கிராமத்தைச் சேர்ந்த இளைஞனுக்கு ஐரோப்பாவில் விமானி உரிமத்தைப் பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விடத்தல்தீவைச் சேர்ந்த அனுஜன் என்ற இளைஞரே ஐரோப்பாவில் விமானி உரிமத்தைப் பெற்றுள்ளார்.
அனுஜன், தமது ஆரம்ப கல்வியை மன்னார் லூயிஸ் முன்பள்ளியிலும், தொடர்ந்து தரம் ஒன்று முதல் 3 வரை புனித சவேரியார் ஆண்கள் கல்லூரியிலும் கற்றார்.
இந்தநிலையில், ஒரு விமானத்தில் தலைமை விமானியாக செயற்படக்கூடிய அதிக திறன் கொண்ட உரிமத்தை அனுஜன் பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

