மனிதவள பயிற்சி மற்றும் ஆலோசனை நிறுவனத்தின் அனுசரனையில் சிறார்களுக்கான சிந்தனா சக்தியை அதிகரிப்பதற்கான பயிற்சிகள் இதன் போது வழங்கப்பட்டன.
மேலும் சிறார்களின் எண்கணித செயற்பாட்டை மேம்படுத்துவதற்கும், துரித கதியில் கணித கற்றல் விடயங்களை மேற்கொள்தல் மற்றும் ஞாபக சக்தியை அதிகரிப்பதற்குமான ஆலோசனைகள் பெற்றாறோர்களுக்கும் வழங்கப்பட்டது.
இன்றைய சிறார்கள் எதிர்காலத் தலைவர்கள் என்பதை அடிப்படையாக் கொண்டு இப் பிரதேச சிறார்களின் கற்றல் செயற்பாட்டை அதிகரிப்பதற்கும் நினைவாற்றலை அதிகரிப்பதற்குமான பயிற்சிகள் மனிதவள பயிற்சி மற்றும் ஆலோசனை நிறுவனத்தினரின் துறைசார் நிபுணர்களினால் இதன் போது வழங்கப்பட்டது.
இதில் மனிதவள பயிற்சி மற்றும் ஆலோசனை நிறுவனத்தின் வளவாளர்களான அ. கருணாகரன், க. திசன் ஆகியோரினால் சிறார்களுக்கான பயிற்சிகள் வழங்கப்பட்டன.
இப் பயிற்சி செயலமர்வில் அதிகளவான மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு கற்றல் செயற்பாட்டில் ஈடுபட்டமையும் குறிப்பிடத்தக்கது.



