கிளிநொச்சி மாவட்ட செயலக மேலதிக அரசாங்க அதிபராக(காணி) திருமதி. அஜிதா பிரதீபன், இன்று(21) தனது கடமைகளைப் பொறுப்பேற்றார்.
கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில், மாவட்ட பதில் அரசாங்க அதிபர் எஸ். முரளிதரனின் முன்னிலையில், காலை அவர் தனது கடமைகளை உத்தியோகப்பூர்வமாக பொறுப்பேற்றுக்கொண்டார்.
நல்லூர் பிரதேச செயலகத்தின் உதவிப் பிரதேச செயலாளராகக் கடமையாற்றி வந்த நிலையிலேயே, இவர் மேலதிக அரசாங்க அதிபராக(காணி) நியமிக்கப்பட்டுள்ளார்.
கிளிநொச்சி மாவட்ட மேலதிக அரசாங்க அதிபராக(காணி) கடமையாற்றிய இ. நளாஜினி கிளிநொச்சி மாவட்ட மேலதிக அரசாங்க அதிபராக நியமனம் செய்யப்பட்டுள்ளதையடுத்து, அவரது இடத்துக்கு பி. அஜிதா நியமிக்கப்பட்டுள்ளார்.
மேலதிக அரசாங்க அதிபராக(காணி) கடமையேற்ற பி. அஜிதா, முன்னர் பதவி ஸ்ரீபுர, கிண்ணியா, பருத்தித்துறை, நல்லூர் ஆகிய பிரதேச செயலகங்களில் உதவிப் பிரதேச செயலாளராகவும் கடமையாற்றியுள்ளார்.
இந் நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர், பிரதம கணக்காளர், பிரதம உள்ளகக் கணக்காய்வாளர், நிர்வாக உத்தியோகத்தர், மாவட்ட பொறியியலாளர், கணக்காளர், மாவட்ட புள்ளிவிபரவியலாளர் மற்றும் உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.


