நெத்தலியாற்றங்கரை பகுதியில் சட்டவிரோத செயற்பாடுகள் அதிகரிப்பு 

கல்மடு குளத்தின் கீழ் வரும் பிரதான ஆறான நெத்திலி ஆறு பகுதியில் தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் அண்மைக்காலமாக நெத்தலியாற்றங்கரை பகுதியில் உள்ள பெறுமதி மிக்க பல வகை மரங்களை சட்டவிரோதமான முறையில் இரவு வேளைகளில் எந்தவித அனுமதியும் இன்றி மரங்கள் அழிக்கப்பட்டு கொள்ளையிடப்பட்டு வருகிறது.
அத்துடன் அப்பகுதியில் உள்ள ஆற்றிலும் சட்ட விரோதமான முறையில் மணல் அகழ்வு இடம்பெற்று வருவதுடன் நெற்செய்கை மேற்கொள்ளப்படும் வயல் நிலங்களிலும் பல அடித்தளத்தில் தோண்டப்பட்டு மணல் அகழ்வு இடம்பெறுவதாக அப்பகுதியில் வாழும் விவசாயிகள் கிராம அலுவலருக்கு வழங்கிய முறைப்பாட்டு அமைப்பாக இன்று(22) தர்மபுரம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி எம். திஸ்ஸாநாயக்க, கிராம அலுவலர், கிராம பொது அமைப்புக்கள் மற்றும் கண்டாவளை பிரதேச செயலக அபிவிருத்தி உத்தியோகத்தர் ஆகியோர் இணைந்து நெத்தலியாறு பகுதியில் இடம்பெறும் சட்டவிரோத செயற்பாடுகள் தொடர்பாக நேரில் சென்று பார்வையிட்டனர்.
இதன் போது கருத்துத் தெரிவித்த தர்மபுரம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி இதுபோன்ற செயற்பாடுகள் இனி வரும் காலங்களில் இடம்பெறாது இருப்பதற்கு தமது பிரத்தியேக தொலைபேசி 0718592122 இலக்கத்தின் ஊடாக எந்த வேளையிலும் தம்மை தொடர்பு கொண்டு எந்தவித குற்றச்செயல்கள் இடம்பெற்றாலும் உடன் தெரிவிப்பதன் மூலம் குற்றச்செயல்களை கட்டுப்படுத்த முடியும் எனவும் இரவு வேலைகளில் கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *