மட்டக்களப்பு மண்முனை மேற்கு பிரதேச செயலகப்பிரிவின் வரலாற்றுச் சிறப்பு மிக்க தாந்தாமலை முருகன் ஆலய வருடாந்த உற்சவ மூன்றாவது நாளில்(21) ஆலய நிர்வாகத்தின் ஏற்பாட்டில் உணர்ச்சிக் கவிஞர் காசிஆனந்தன் எழுதி ரி எல் மகராசன் பாடிய “கடம்பன் மாலை” எனும் பாடல் இறுவெட்டு வெளியீடு செய்யப்பட்டது.
இந்நிகழ்வில் ஆன்மிக பெரியார்கள், அரசாங்க அதிபர், பிரதேச செயலாளர், அரச உத்தியோகத்தர்கள், ஆலய நிர்வாகத்தினர்கள் மற்றும் மக்கள் ஆகியோர் கலந்து வெளியீட்டினை சிறப்பித்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


