உணவு ஒவ்வாமை காரணமாக கிண்ணியா தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நோயாளிகளை நகர சபையின் தலைவர் மஹ்தி பார்வையிட்டார்.
அனுமதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை இதுவரை 19 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் பெண்கள் 10 பேரும். ஆண்கள் 6 பேரும். சிறுவர்கள் 3 பேரும் அடங்குகிறார்கள்.
இதேபோன்று மூதூர் வைத்தியசாலையில் மூவரும் நிலாவெளியில் இருவரும் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
நேற்று(22) அதிகாலை 4 மணியிலிருந்து வயிற்றோட்டம், வாந்தி, அதிக உஷ்ணத்துடனான காய்ச்சல் போன்ற அறிகுறிகள் காரணமாக இவர்கள் வைத்தியஸசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அனுமதிக்கப்பட்ட நோயாளிகளிடம் விசாரணை மேற்கொண்டபோது அவர்கள் அனைவரும் நேற்று முன்தினம் (21) இரவு சுட்ட கோழி இறைச்சியுடன் உணவை சாப்பிட்டதாகவும் அந்த உணவை ஒரே கடையிலே வாங்கியதாகவும் கூறுகின்றனர்.
இந்நிலையில், வைத்தியர்களின் அறிக்கைகள் மற்றும் பரிசோதனைகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டால் அந்த உணவுகளை விற்பனை செய்த கடை உரிமையாளருக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

