மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் தேர்த்திருவிழா

ஈழத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் வருடாந்த ஆடி அமாவாசை மஹோற்சவத்தின் கொடியேற்றத் திருவிழா கடந்த(15) அன்று ஆரம்பமாகி உற்சவத்தின் வசந்த மண்டப பூசை என்பன இடம்பெற்றன.

அத்தோடு இன்று(23) ஆடி அமாவாசை உற்சவத்தின் தேர்த்திருவிழா நடைபெறவுள்ளதோடு நாளை(24)பிதிர்க்கடன் தீர்க்கும் ஆடியமாவாசை தீர்த்தோற்சவம் ஆலய தீர்த்த குளத்திலும் வெகு சிறப்பாக நடைபெறவுள்ளது.

மாமாங்கத்தில் தீர்த்தக் குளம் இராமபிரானால் தோண்டப்பட்டதாகவும் அனுமன் கொண்டு வந்த லிங்கம் அங்கே புதைக்கப்பட்டதாகவும் நோய்கள் பல தீர்க்கும் அற்புத சக்திகளையுடையதெனவும் இக்குளத்தில் காணப்படும் சந்தனச் சேறும் பல அரிய வைத்திய குணங்களுடையதெனவும், பல்வேறுபட்ட சரும நோய்களுக்குரிய நிவாரணி எனவும் நம்பப்படுகின்றது.

கீர்த்தி தலம் தீர்த்தம் இங்கு சிறப்பு அம்சமாகவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *