கங்குவேலி ஆதிசிவன் ஆலய ஆடி அமாவாசை தீர்த்தோற்சவம்

மூதூர் – திருக்கரைசையம்பதி கங்குவேலி ஆதிசிவன் ஆலய ஆடி அமாவாசை தீர்த்தோற்சவம் நாளை(24) மகாவலி கங்கைக்கரையிலே இடம்பெறவுள்ளது.

இன்று(23) மாலை 03 மணியளவில் ஶ்ரீ முத்து விநாயகர் ஆலயத்தில் இருந்து எழுந்தருளி புனித மகாவலி கங்கைக்கரையை சென்றடையவுள்ளது.

இன்று இரவு தீர்த்தக் கரையிலே அகத்திய ஸ்தாபன வரலாற்றைக் கூறும் திருக்கரைசைப் புராணம் படித்துப் பயன் சொல்லுகின்ற நிகழ்வும், சைவ சமய கலை கலாசாரத்திற்கு அமைவான நிகழ்வுகளும் இடம்பெறவுள்ளது.

நாளை காலை புனித தீ மிதிப்பு வைபவமும் திருப்பொற் சுண்ணம் இடிக்கின்ற நிகழ்வும் தொன்மையும் அருளும் நிறைந்த ஆடிஅமாவாசை தீர்த்தோற்சவம் இடம்பெறும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *