போசணை மாதத்தை முன்னிட்டு “ஆரோக்கியமான உணவு எமது உரிமை “என்ற தொனிப்பொருளில் விழிப்புணர்வு கண்காட்சி இன்று(23) நடைபெற்றது.
குறித்த விழிப்புணர்வு கண்காட்சியானது கண்டாவளை பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி பிரிவின் ஏற்பாட்டில் பரந்தன் பொதுநோக்கு மண்டபத்தில் நடைபெற்றது.
கர்ப்பிணி தாய்மார்கள் மற்றும் பாலுட்டும் தாய்மார்களின் பங்களிப்புடன் இக் கண்காட்சி முன்னெடுக்கப்பட்டது.
இதில்ல் பொதுச்சுகாதார பரிசோதகர்கள் மற்றும் குடும்ப நல உத்தியோகத்தர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

