இந்து மா சமுத்திரத்தின் முத்தெனத் திகழும் இலங்காபுரியும் அம்பாறை மாவட்டத்தில் கிழக்கு வங்ககடலோரம் தனி ஆட்சி புரியும் திருக்கோவில் ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலய வருடாந்த ஆடி அமாவாசை தீர்த்த உற்சவமானது இன்று(24) இலட்சக்கணக்கான மக்கள் புடை சூழ இந்து மா சமுத்திரத்தின்னோரம் விண்ணைப் பிளக்கும் அளவிலான மக்களின் அரோகரா கோஷங்களுடன் மிக சிறப்பாக இடம்பெற்றது.
இந்நிகழ்வுகள் யாவும் ஆலயத்தலைவர் திரு. சுரேஷ் தலைமையில் இடம்பெற்றது.
குறித்த தீர்த்த உற்சவ திருவிழாவானது இம் மாதம் 07ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி 17 நாட்கள் திருவிழாக்கோலம் பூண்டு இன்று சமுத்திர தீர்த்த உற்சவம் இடம்பெற்றது.
மேலும் ஆடி அமாவாசை தீர்த்த உற்சமானது ஆடி அமாவாசை தமிழ் மரபில் மிக முக்கியமான நாளாகக் காணப்படுவதுடன் இது ஆடி மாதத்தில் வரும் அமாவாசை ஆகும். இந்த நாளில் நடைபெறும் தீர்த்த உற்சவம் என்பது ஆன்மிக, சமய, குடும்ப பிணைப்பு மற்றும் பித்ரு கடமைகளை நினைவூட்டும் ஒரு புனித நாளாக காணப்படுவதும் குறிப்பிடத்தக்கது.


