சாய்ந்தமருது எம்.எஸ்.காரியப்பர் வித்தியாலயத்தில் மர்ஹும் ஏ.ஆர். மன்சூரின் நினைவு தினம் நாளை(25) அனுஷ்டிக்கப்படவுள்ளது.
பாடசாலையில் அதிபர் எம்.எஸ்.எம். ஆரிப் தலைமையில் ஏ.ஆர். மன்சூரினைநினைவு கூரும் இத்தினத்தை அனுஷ்டிக்கும் முகமாக விசேட காலைக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டு, இதன் போது இப்பாடசாலை மாணவி ஒருவரால் முன்னாள் அமைச்சர் மர்ஹும் ஏ.ஆர். மன்சூர் பற்றி விசேட பேச்சும் இடம்பெறவிருப்பதோடு, அதிபர் எம்.எஸ்.எம். ஆரிபினால் இரங்கல் உரையும் மற்றும் துஆப் பிரார்த்தனையும் இடம்பெறும்.
அரசியல்வாதி என்ற அடிப்படையில் இல்லாமல் எமது பாடசாலைக்கும் எமது சமூகத்திற்கும் உதவி புரிந்த, அர்ப்பணிப்பான பணியைச் செய்த முன்னாள் அமைச்சருக்கு எமது பாடசாலை சமூகம் செய்கின்ற ஓர் அர்ப்பணிப்பான சேவையாக இந்நிகழ்வு இருக்கும்.
அவரின் பெயரால் எமது பாடசாலைக்கு அவர்களது மகள் மற்றும் மகனால் சிறப்பான சேவைகள் செய்யப்பட்டு வருகின்றது.
அந்த வகையில் பாடசாலையினுடைய கேட்வே அவருடைய மகளின் சொந்த தனிப்பட்ட செலவினால் செய்யப்பட்டு, அண்மையில் திறந்து வைக்கப்பட்டது.
மன்சூரின் மகனால் இப் பாடசாலைக்கு குடி கிணறு அமைத்துத் தரப்பட்டது. அது மாத்திரமில்லாது பாடசாலை கற்றல், கற்பித்தல் செயற்பாடுகளுக்குரிய உபகரணங்களும் இருவராலும் இப் பாடசாலைக்கு வழங்கி, மாணவர்கள் கௌரவிக்கப்பட்டார்கள்.
அவர்களால் வழங்கப்பட்ட கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளால் மாணவர்கள் சிறந்தோங்கிக் காணப்படுவதை கண்காணிக்கக்கூடியதாகவும் இருக்கின்றது.
இவ்வாறு அர்ப்பணிப்பான சேவைகளைச் செய்து வருகின்ற குடும்பத்தின் தலைவருக்கு இப்பாடசாலையின் நினைவு தினத்தை அனுஷ்டித்து, அவரது மறுமை வாழ்வுக்காக துஆப் பிரார்த்தனை மேற்கொள்ளவுள்ளதாகவும் பாடசாலையின் அதிபர் எம்.எஸ்.எம். ஆரிப் தெரிவித்தார்.

