கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபைக்கு உட்பட்ட தியாவட்டவான் கொழும்பு பிரதான வீதி பகுதியில் இன்று(26) அதிகாலை கூட்டமாக காட்டு யானைகள் குடியிருப்புப் பகுதிக்குள் ஊடுருவியதால் பிரதேச மக்கள் பெரும் அச்சத்தை எதிர் கொண்டனர்.
இதனகயடுத்து காட்டு யானைகளை குடியிருப்பு பகுதிக்குள் மேலும் உள்நுழையாமல் விரட்டும் பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டன.
கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் எம்.எச்.எம். பைறூஸ் மற்றும் கல்குடா அனர்த்த அவசர சேவைப் பிரிவினர், அகீல் அவசரப் பிரிவு இளைஞர்களின் ஒத்துழைப்புடன் யானைகள் காட்டுப் பகுதிக்குள் விரட்டப்பட்டன.
இந்த துரித நடவடிக்கைகளை மேற்கொண்ட அனைவருக்கும் பிரதேச மக்கள் நன்றிகளை தெரிவித்துள்ளனர்.

