மட்டக்களப்பு மெதடிஸ்த்த மத்திய கல்லூரியில் இரத்த தான முகாம்

உங்கள் இரத்தம் ஒருவரின் வாழ்வை காக்கலாம் எனும் தொனிப் பொருளில் இரத்த தான முகாம் இன்று(26) மட்டக்களப்பு மெதடிஸ்த்த மத்திய கல்லூரியின் கார்ட்மன் மண்டபத்தில் இடம்பெறுகிறது.

இவ் இரத்த தான முகாமை மட்டக்களப்பு மத்திய கல்லூரி 2005 ஆம் ஆண்டு பழைய மாணவர்கள் ஏற்பாடு செய்தனர்.

காலை 8:30 க்கு ஆரம்பமாகிய இந்நிகழ்வு மதியம் 01:30 வரை இடம்பெறவுள்ளது. இதில் பாடசாலை பழைய மாணவர்கள் மற்றும் நலன் விரும்பிகள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுக்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *