மன்னாரில் சர்வதேச தரத்திற்கு அமைய அகழ்வாய்வு செய்யுமாறு வலியுறுத்தி போராட்டம்

இலங்கையில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட மிகப்பெரிய மனித புதைகுழி மன்னாரில் உள்ள நிலையில், இலங்கையில் காணப்படும் அனைத்து மனித புதைகுழிகளையும் சர்வதேச தரத்திற்கு அமைய அகழ்வாய்வு செய்யுமாறு அரசாங்கத்தை வலியுறுத்தி போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

“’எங்கே எங்கள் உறவுகள் எங்கே?,” “இலங்கை அரசே இது நாடா அல்லது சுடுகாடா?”, “வேண்டும் வேண்டும் சர்வதேச விசாரணை வேண்டும்,” “மனிதனும் புதைகுழிக்குள் நீதியும் புதைகுழிக்குள்ளா”, போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளைத் தாங்கியவாறு மன்னார், அடம்பன் சந்தியிலிருந்து திருக்கேதீஸ்வரம் மனித புதைகுழி வரை பேரணியாக சென்ற மன்னார் மக்கள், மனித புதைகுழிகள் குறித்த அகழ்வாய்வுகளை வெளிப்படையான முறையில் மேற்கொள்ளுமாறு அரசாங்கத்தை வலியுறுத்தினர்.

இலங்கையில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட மிகப்பெரிய புதைகுழி மன்னாரில் உள்ள சதொச புதைகுழி ஆகும். அங்கு 28 சிறுவர்களின் எலும்புகள் உட்பட 376 எலும்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டன. இலங்கையில் நான்காவது பெரிய மனித புதைகுழியாக மன்னாரில் உள்ள திருக்கேதீஸ்வரம் புதைகுழி தற்போது மாறியுள்ளது. அங்கு 82 மனித எலும்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *