கிளிநொச்சி மாவட்ட இளைஞர் கழக சம்மேளன புதிய நிர்வாகத் தெரிவும் பொதுக்கூட்டமும் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இன்று பிற்பகல் நடைபெற்றது.
இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத்துறை பிரதியமைச்சர் எரங்க குணதிலகவின் பங்குபற்றலுடன் நடைபெற்றது.
குறித்த நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் இளங்குமரன், உதவி மாவட்ட செயலாளர் சத்தியஜீவிதா, சேவைகள் மன்ற வடமாகாண உதவிப்பணிப்பாளர், இளைஞர் சேவை உத்தியோகத்தர், இளைஞர் மற்றும் யுவதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

