வவுனியாவில் மோட்டார் சைக்கிள் விபத்து, 23 வயதுடைய இளைஞன் உயிரிழப்பு

வவுனியாவில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக புளியங்குளம் பொலிஸார் தெரிவித்தனர்.

திருகோணமலையில் இருந்து கிளிநொச்சி நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிள் மின்சாரக் கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இவ்விபத்தில் கிளிநொச்சி, பாரதிபுரத்தை சேர்ந்த 23 வயதுடைய இளைஞன் ஒருவனே உயிரிழந்துள்ளான்.

உயிரிழந்தவரின் சடலம் வவுனியா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகள் வவுனியா, புளியங்குளம் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *