கிளிநொச்சி அறிவியல் நகர் யாழ் பல்கலைக்கழக வளாகத்தில் காவலர் ஒருவர் உயிரிழப்பு

கிளிநொச்சி அறிவியல் நகர் யாழ் பல்கலைக்கழக வளாகத்தில் பாதுகாப்புக் கடமையில் இருந்த காவலர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

 

 

கிளிநொச்சி அறிவியல் நகர் யாழ் பல்கலைக்கழக விவசாயப் பீட வளாகத்தில் பாதுகாப்புக் கடமையில் இருந்த தர்மசீலன் ரகுராஜ் எனும் 34 வயதுடைய காவலர் ஒருவர் பலியாகியுள்ளார்.

 

 

குறித்த பாதுகாவலர் விவசாயப் பாடத்தின் மேல் மாடியில் இருந்து தவறி விழுந்து மரணம் ஏற்பட்டிருக்கலாம் என ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியப்படுகிறது என கிளிநாச்சி மாவட்ட தடவியல் பொலிஸ் உத்தியோத்தர்கள் தெரிவித்துள்ளார்கள்.

 

 

கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிபதி சம்பவ இடத்துக்கு நேரில் சென்று பார்வையிட்டதின் பின்னர் உடல் கூற்று பரிசோதனைக்காக கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலைக்கு சடலம் ஒப்படைப்படவுள்ளது.

 

 

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *