நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் நாளை கொடியேற்றத்துடன் ஆரம்பம்

வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் நாளைய தினம் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது.

 

இந்தநிலையில், கொடியேற்றத்துக்காகச் சம்பிரதாயப் பூர்வமாகக் கொடிச்சீலை எடுத்துவரும் நிகழ்வு இன்றைய தினம் நடைபெற்றது.

 

யாழ்ப்பாணம் சட்டநாதர் சிவன் ஆலயத்திற்கு அருகில் உள்ள வேல் மடம் முருகன் ஆலயத்தில் இன்றைய தினம் நடைபெற்ற விசேட பூஜை வழிபாடுகளைத் தொடர்ந்து, அங்கிருந்து சிறிய தேர் ஒன்றில் கொடிச்சீலை பருத்தித்துறை வீதி ஊடாக நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தைச் சென்றடைந்தது.

 

நல்லூர் ஆலய மகோற்சவம், நாளை ஆரம்பமாகித் தொடர்ந்து 25 நாட்களுக்கு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *