யாழ்ப்பாணம் – செம்மணி, சித்துப்பாத்தி மனித புதைகுழியின் இரண்டாம் கட்டத்தின் 24ஆவது நாள் அகழ்வுப்பணிகள் இன்று(29) முன்னெடுக்கப்படவுள்ளன.
செம்மணி – சித்துப்பாத்தி மனித புதைகுழியில் நேற்று(28) முன்னெடுக்கப்பட்ட அகழ்வு நடவடிக்கைகளின் போது மேலும் 3 என்புக்கூடுகள் வெளிப்பட்டன.
இதற்கமைய, சித்துப்பாத்தி மனித புதைகுழியிலிருந்து இதுவரை மொத்தமாக 104 என்புக்கூட்டுத் தொகுதிகள் வெளிப்பட்டுள்ளன.
அவற்றில், 97 என்புக்கூட்டுத் தொகுதிகள் முற்றாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையில், இன்றும் அகழ்வுப்பணிகள் தொடரவுள்ளன.

