கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் கிளிநொச்சி மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்று வருகின்றது.
ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன், இணைத்தலைவர் வடமாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் ஆகியோர் தலைமையில் நடைபெற்று வருகின்றது.
குறித்த ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் மாவட்ட அரசாங்கதிபர் எஸ். முரளீதரன், பாராளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறீதரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், வடமாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள், வடமாகாண திணைக்கள பணிப்பாளர்கள், பிரதேச சபைகளின் தவிசாளர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள், அரச உத்தியோகத்தர்கள் மற்றும் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.

