வாழைச்சேனை இந்துக்கல்லூரி (தேசிய பாடசாலை) யிலிருந்து அண்மையில் வெளியான கல்விப்பொதுத்தர சாதாரண பரீட்சையில் 2024 (2025) சிறந்த பெறுபேறுகளைப் பெற்று பாடசாலைக்கும் பிரதேசத்திற்கும் பெருமை சேர்த்த மாணவர்களைப் பாராட்டிக்கௌரவிக்கும் நிகழ்வு 1995 சாதாரண மற்றும் 1998 உயர்தர கல்வியாண்டு பழைய மாணவர்களின் அனுசரணையுடன் கடந்த 25ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை ஆராதனையின் போது மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.
கல்லூரியின் அதிபர் திருமதி ரீ. சுரேஷ்குமார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், கல்லூரியின் பிரதி அதிபர் திருமதி சவுதாகினி சரவணபவன், கல்லூரியின் ஆரம்பப்பிரிவு பாடசாலையின் அதிபர் திருமதி சோபா ஜெயரஞ்சித், பாடசாலை அபிவிருத்திச் சங்கச்செயலாளர் திரு ரீ. உதயராஜா, பழைய மாணவர் சங்கத்தின் உறுப்பினர்கள், 1995 சாதாரண மற்றும் 1998 உயர்தர கல்வியாண்டு பழைய மாணவர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் மாணவர்களின் பெற்றோர்கள் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
பரீட்சைக்குத் தோற்றிய 137 மாணவர்களில் 102 மாணவர்கள் உயர்தரத்திற்கு தகுதி பெற்றுள்ளதுடன், இதில்
9 ஏ – 9 மாணவர்களும்
8 ஏ – 9 மாணவர்களும்
7 ஏ – 6 மாணவர்களும்
6 ஏ – 6 மாணவர்களும் பெற்றுக்கொண்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.


