கிளீன் ஸ்ரீலங்கா 3 வது வேலைத்திட்டம் கிளிநொச்சி கடற்கரையில் ஆரம்பம்

அழகான கடற்கரை மனங்கவரும் ஒரு சுற்றுலாத்தலமாக கடல் சூழல் உணர்வுமிக்க சமூக பொறுப்புணர்வுடன் கூடிய சுற்றாடலை நிர்மாணித்தல் என்ற தொனிப்பொருளின் நடைமுறைக்கு அமைய நாடு பூராகவும் 256 இடங்களில் இடம்பெற்று வருகின்ற நிலையில் இன்று(29) காலை 07.00 மணியளவில் 55வது இராணுவ படைப்பிரிவின் மேஜர் ஜென்ரல் அருனா விஜகோன் மற்றும் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் எஸ். முரளிதரன் ஆகியோர்களின் தலைமையில் கௌதாரிமுனை கடற்கரையில் கிளீன் சிறீலங்கா செயற்றிட்டமான சிரமதானப்பணிகள் முன்னெடுக்கப்பட்டது.

 

இதேபோன்று கிளீன் சிறீலங்கா செயற்றிட்டமான கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள 7 இடங்களில் சிரமதானப் பணிகளில் இராணுவத்தினருடன்  இணைந்து பூநகரி பிரதேச செயலாளர் ஆயக்குலன், அரச அதிகாரிகள், பொலிஸார்  மற்றும் பொதுமக்கள் ஆகியோர் பங்கெடுத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *