“ஒரு செழிப்பான தேசம் – அழகான வாழ்க்கை” என்ற ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்கவின் எண்ணக்கருவில் உதித்த கிளீன் ஸ்ரீ லங்கா தேசிய வேலைத்திட்டத்தின் கீழ், கிழக்கு மாகாணத்தின் மிகப்பெரிய சுற்றுலாத்தலமான காத்தான்குடி கடற்கரையை சுத்தப்படுத்தும் பணிகள் இன்று(29) காலை இடம்பெற்றது.
இந்தச் சிரமதான நிகழ்வு, மட்டக்களப்பு குருக்கள்மடம் இராணுவத்தினரின் ஏற்பாட்டில் இடம்பெற்றது.
குருக்கள்மடம் இராணுவ முகாம் பொறுப்பதிகாரி மேஜர் ரஞ்சன் பகல்ல தலைமையில் இத்திட்டப்படுத்தும் பணிகள் இடம்பெற்றன.
சிரமதானத்தின் போது கடற்கரைப் பகுதியில் காணப்பட்ட கழிவுப் பொருட்கள் சேகரிக்கப்பட்டு, அதனுடன் தொடர்புடைய முறையான அகற்றும் நடவடிக்கைகள் நகர சபையின் மூலம் மேற்கொள்ளப்பட்டன என்பதும் குறிப்பிடத்தக்கது.
காத்தான்குடி நகர சபை தவிசாளர் எஸ்எச்எம்.அஸ்பர், நகரசபை உறுப்பினர்கள் மற்றும் சமூகநல அமைப்புக்களின் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.





