மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் கழக சம்மேளனத்தின் பொதுக்கூட்டம்

இளைஞர் விவகார விளையாட்டுத்துறை அமைச்சின் ஒருங்கிணைப்பில் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் கழக சம்மேளனத்தின் பொதுக்கூட்டமானது முன்னாள் மாவட்ட இளைஞர் கழக சம்மேளனத்தின் தலைவர் ஜே. சஜிவ் தலைமையில் புனித செபஸ்தியார் ஆலய மண்டபத்தில் நேற்று(30) இடம்பெற்றது.

இந் நிகழ்வின் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட  பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு கலந்து சிறப்பித்தார்.

2025/ 2026 ஆம் ஆண்டுக்கான மாவட்ட இளைஞர் கழக சம்மேளனத்தின் நிர்வாக சபை உறுப்பினர்களுக்கான பொது வாக்கெடுப்பின் மூலம் புதிய தலைவராக லோஜிதன் தெரிவு செய்யப்பட்டார்.

இவ் உறுப்பினர்களினால் மாவட்டத்தில் உள்ள இளைஞர் யுவதிகளுக்கான அபிவிருத்திப் பணிகளையும் சமூக சேவைகளையும் மேற்கொள்ளவுள்ளனர்.

இந் நிகழ்வில் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மாகாண பணிப்பாளர், தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் பணிப்பாளர் சபை உறுப்பினர்கள், இளைஞர் அபிவிருத்திப் பிரிவின் உதவிப் பணிப்பாளர், மட்டக்களப்பு உதவி பணிப்பாளர் மற்றும் மாவட்ட இளைஞர் சேவைகள் அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *