மட்டு நகர் தாந்தாமலை 40வட்டை மக்களடியூற்று அருள்மிகு நாகமாரியம்மன் ஆஞ்சநேய ஜோதிட ஆலய 108 சங்காபிசேக திருச்சடங்கு நாளை ஆரம்பமாகவுள்ளது.
மட்டக்களப்பின் தாந்தாமலை பகுதி 40வட்டை மக்களடியூற்றில் எழுந்தருளி அருள்வாக்களித்து வரும் நாகமாரி அம்மன் ஆஞ்சநேயர் ஜோதிட ஆலயத்தின் வருடாந்த 108 சங்காபிசேகமும் திருசடங்கும் நாளை(01) ஆரம்பமாகி சங்காபிசேக பூஜைகள் நடைபெற்று எதிர்வரும் 03ம் திகதி காலை நிறைவு பெற்று வரும் 13ம் திகதி வைரவர் சாந்தி செய்யப்பட்டு நிறைவடையும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மன்னார் நிருபர்


