யாழ் குடாநாட்டில் இம்முறை கால போகத்தின்போது பூசணிச் செய்கை அதிக விளைச்சலைத் தந்துள்ளது எனச் செய்கையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மானிப்பாய், சங்குவேலிப் பகுதியிலுள்ள தோட்டங்களில் மேற்கொள்ளப்பட்ட பூசணிச்செய்கையே அதிக விளைச்சலைக் கொடுத்துள்ளது. சந்தையில் ஒரு கிலோ பூசணிக்காய் 80 ரூபாவாக விற்பனை செய்யப்படுகின்றது.

