பேத்தாழை பாலீஸ்வரர் ஆலயத்தில் புலமைப்பரிசில் பரீட்சையில் தோற்றவுள்ள மாணவர்களுக்கான விசேட பூஜை

பேத்தாழை சந்திரகாந்தன் வித்தியாலயத்தில் கல்வி பயிலும் தரம் 5 மாணவர்கள் எதிர்வரும் 10ஆம் திகதி தோற்றவிருக்கும் புலமைப்பரிசில் பரீட்சையை முன்னிட்டு பேத்தாழை அருள்மிகு ஸ்ரீ பாலாம்பிகாசமேத பாலீஸ்வரர் ஆலயத்தில் இன்று(01) வெள்ளிக்கிழமை பரீட்சையில் தோற்றவிருக்கும் மாணவர்கள் சிறந்த பெறுபேறுகள் பெற வேண்டும் என்பதற்காக விசேட அபிஷேக பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன.

இப் பூஜை வழிபாடுகளில் பரீட்சைக்கு தோற்றும் சகல மாணவர்கள், அவர்களின் பெற்றோர்கள், பாடசாலை அதிபர் மற்றும் ஆசிரியர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இப் பூஜை வழிபாடுகளின் பின்னர் மாணவர்களுக்கு ஆலய நிர்வாக சபையினரால் பென்சில், பேனை போன்ற கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

    

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *