காத்தான்குடி காரிகை கலை இலக்கிய மன்றத்தின் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

கடந்த 2024 ஆம் ஆண்டு “புவி வெப்பமடைதலில் இருந்து விடுதலை பெறுவோம் ” எனும் தொனிப்பொருளில் நடைபெற்ற சித்திரப் போட்டியில் பங்குபற்றிய 114 பாடசாலை மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் முதலாவது நிகழ்வு இடம்பெற்றது.

காத்தான்குடி 5 ஜாமியுள்ளாபிரீன் வித்தியாலயத்தில் அதிபர் பாறுக் தலைமையில் சிறப்பாக நடைபெற்ற நிகழ்வில் மன்றத்தின் ஸ்தாபக தலைவி ஜாஹிதா ஜலால்தீன், கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் சிந்து உஷா, பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் ஆகியோர் கலந்து சிறப்பித்தமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *