கோறளைப்பற்று பிரதேச சபையின் நிர்வாகத்திற்குட்பட்ட பேத்தாழை கலைமகள் முன்பள்ளியின் சிறுவர் விளையாட்டு விழா இன்று(04) நடைபெற்றது.
இதன்போது அதிதிகள் மலர் மாலை அணிவிக்கப்பட்டு மாணவர்களின் பண்ட் வாத்திய இசையுடன் அழைத்து வரவேற்கப்பட்டனர்.
தேசியக் கொடி ஏற்றப்பட்டு தேசியக் கீதம் இசைக்கப்பட்டு மங்கள விளக்கேற்றல் நிகழ்வுடன் நிகழ்வுகள் யாவும் ஆரம்பமாகின.
மாணவர்களின் உடற்பயிற்சி கண்காட்சி நிகழ்வு மற்றும் மாணவர்களின் தனி, குழு விளையாட்டுக்கள் எனபன இடம்பெற்றன. மாணவர்கள் ஆர்வத்துடன் நிகழ்சிகளில் பங்குபற்றியிருந்தனர்.
வெற்றி பெற்ற மாணவர்கள் பாராட்டப்பட்டு வெற்றிப் பதக்கங்களும் பரிசில்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
இந் நிகழ்வில் பிரதம அதிதிகளாக கோறளைப்பற்று பிரதேச சபை தவிசாளர் சுதாகரன் பிரதம அதிதியாகவும் முதன்மை அதிதியாக பிரதேச சபை உறுப்பினர் பிறைசூடி மற்றும் கௌரவ அதிதியாக பிரதேச சபை உறுப்பினர் நிமல்ராஜ் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.
அத்துடன் சிறப்பு அதிதிகளாக பிரதேச பாடசாலை அதிபர்கள், கிராமசேவை உத்தியோகத்தர் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.


