மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை இ. கி.மி வித்தியாலயத்தில் மாபெரும் வரைதல் மற்றும் வர்ணம் தீட்டும் போட்டிகளானது மனிதவள பயிற்சி மற்றும் ஆலோசனை நிறுவனத்தின் வளவாளர் கருணாகரன் தலைமையில் 02ஆம் திகதி இடம்பெற்றது.
மாணவர்களிடையே நீரை சேமிப்போம் சுற்றுச்சூழலை காப்போம் எனும் தொனிப்பொருளில் தரம் 1 முதல் 7 வரையான மாணவர்களுக்கான போட்டிகளு இடம்பெற்றன.
மனிதவள பயிற்சி மற்றும் ஆலோசனை நிறுவனம் மற்றும் எஸ்ஐபி அபாகஸ் நிறுவனத்தின் அனுசரனையில் சிறார்களிடையே நீரை சேமிப்போம் சுற்றுச்சூழலை காப்போம் எனும் விழிப்புணர்வு ஓவிய போட்டிகள் இடம்பெற்றன.
இப் போட்டிகளில் அதிகமான சிறார்கள் ஆர்வத்துடன் ஓவியங்களை வரைந்ததுடன் இப் போட்டிகளில் வெற்றி பெறும் வெற்றியாளர்களுக்கு பெறுதியான பரிசுகள் வழங்கப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.


