கடந்த வருடங்களில் மாநகர சபையின் 20 வட்டாரங்களில் செலுத்த வேண்டிய வரிப்பணம் 90 மில்லியன் நிலுவையுள்ளதனால் அவற்றை மாநகர சபை உத்தியோகத்தர்கள் ஐந்து குழுவாக பிரித்து அறவிடுகின்றனர்.
மேலும் கடந்த வருடங்களான 2022, 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளில் மட்டும் 62 மில்லியன் நிலுவை அறவிடாது காணப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
மக்களின் வசதிகருதி மக்கள் வீடுகளுக்கு சென்று நிலுவைகளை அறவிடும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
தற்போது மாநகர சபையினால் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்கான செயற்திட்டங்கள், தின்மக்கழிவு முகாமைத்துவம், வீதி அமைத்தல், மின் விளக்குகளை பொருத்துதல் மற்றும் பாதிக்கப்பட்ட வீதிகளை செப்பனிடுதல் போன்ற பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர்.
மேலும் மாநகரசபை எல்லைப்பகுதியினுல் கட்டாக்காலி மாடுகளின் நடமாட்டத்தை தவிர்ப்பதற்கு எதிரான மாடுகள் வளப்பவர்களுக்கான விழிப்புணர்வு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதுடன் மேலும் வீதியோர வியாபாரத்தினை தடுப்பதற்கு தேவையான ஆலோசனையை வழங்கி வருகின்றார்.
இந் நிகழ்வில் பிரதி முதல்வர் வை. தினேஸ்குமார், மாநகர சபையின் ஆணையாளர் என். தனஞ்செயன், கணக்காளர்கள் மற்றும் நிர்வாக உத்தியோகத்தர் ஆகியோர் கலந்து கொண்டனர்.


