கனேடிய தூதரக அதிகாரியுடனான சந்திப்பு

மட்டக்களப்பிற்கு வருகை தந்த கனேடிய தூதரக அதிகாரி க்வென் டெம்மல் அரசியல் மற்றும் வர்த்தக ஆலோசகருக்கும் மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் ஒன்றியத் தலைவரும் மனித உரிமைகள் செயற்பாட்டாளருமான ச. சிவயோகநாதனுக்குமான சந்திப்பானது நேற்று(05) மாலை றிவேரா விடுதியில் நடைபெற்றது.

இச் சந்திப்பின்போது தமிழ் மக்கள் தொடர்பாக கனேடிய அரசு எடுக்கும் முயற்சிகளுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. அத்துடன் சமகால அரசியல் மற்றும் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சனைகள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.

குறிப்பாக மனிதப் புதைகுழிகள், காணாமலாக்கப்பட்டோரது பிரச்சனைகள், சிவில் சமூக பிரதிநிதிகள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் மற்றும் வனவளத் திணைக்களத்தினரது அத்து மீறிய செயற்பாடுகள் தொடர்பிலும் எடுத்துரைக்கப்பட்டது.

அத்துடன் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் எதிர்வரும் செப்ரெம்பர் மாதம் நடைபெறவுள்ள அமர்வில் தமிழர்கள் மீது நீண்ட காலமாக சிறிலங்கா அரசு திட்டமிடப்பட்ட வகையில் நடாத்தப்பட்டு வரும் இன அழிப்பு தொடர்பில் குரல் கொடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *