கிளிநொச்சியில் பங்குனி உத்தரப்பொங்கல் நிகழ்வு

வரலாற்று சிறப்பு மிகு கிளிநொச்சி கரைச்சி புளியம்பொக்கணை நாகதம்பிரான் ஆலய வருடார்ந்த பங்குனி உத்தரப்பொங்கல் நிகழ்வுகள் சிறப்பாக இடம்பெற்று வருகிறது.

வடமாகாணத்தின் பல பகுதிகளிலிருந்தும் நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பெருமாளவான அடியவர்கள் தங்களுடைய நேர்த்திகளை காவடிகளாகவும், பாற்ச்செம்பாகவும், தூக்கு காவடி, பறவைக்காவடி, பொங்கலாகவும் நிறைவேற்றி வருகின்றனர்.அடியவர்களின் நலன் கருதி போக்குவரத்து, பாதுகாப்பு, சுகாதார வசதிகள் அனைத்தும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் புத்தூர் சந்தியிலிருந்து புறப்பட்ட பண்டவண்டில்கள் இன்று மாலை ஆலயத்தை வந்தடைந்தவுடன் பண்டகங்கள் எடுக்கப்பட்டு பாரம்பரிய பொங்கல் நிகழ்வும் இடம்பெறவுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *