நேருபுரம் ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலய வருடாந்த அலங்கார மஹோற்சவம் ஆரம்பம்

இந்துமா சமுத்திரத்தின் முத்தெனத் நிகழும் இலங்காபுரியில் கிழக்கு மகாணத்தில் அம்பாறை மாவட்டத்தில் திருக்கோவில் பிரதேசத்தில் எழில் கொஞ்சும் செந்நெல் வயல் வெளிகளும் மலைகளும் ஆறுகள் சூழ் அழகிய கிரமமாம் நேருபுரம் கிராமத்தில் வேம்பு மரத்தடியில் தனிக்கோவில் கொண்டு நாடிவரும் அடியவர்களின் குறை நிறைகளை தீர்த்துச் செல்வத்தை வாரிவழங்கும் வள்ளல் நாயகனாம் திருக்கோவில் நேருபுரம் ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலய வருடாந்த அலங்கார மஹோற்சவமானது பஞ்சபூதங்களின் ஆசிர்வாதத்துடனும் பக்தர்களின் அரோகரா கோஷ முழக்கத்துடன் நேற்று(19) கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது.

தொடர்ச்சியாக பூசை நிகழ்வுகள் யாவும் இடம்பெற்று எதிர்வரும் 26ஆம் திகதி ஒன்பதாம் நாள் கிராம வீதி உலா இடம்பெற்று அடுத்த நாளான 27ஆம் திகதி தீர்த்த உற்சவத்தினைத் தொடர்ந்து 28ஆம் திகதி பைரவர் பூசையுடன் இவ்வாண்டுகான உற்சவம் நிறைவடையவுள்ளது.

அத்துடன் பூசை நிகழ்வுகள் யாவும் உற்சவ கால பிரதம குருக்கள் சிவஸ்ரீ சுகிர்தன் குருக்கள் தலைமையில் இடம்பெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *