நுவரெலியாவில் தபால் ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு; வெளிநாட்டவர்கள் பெரும் பாதிப்பு

நாட்டிலுள்ள அனைத்து தபாலகங்கள் மற்றும் உப தபால் அலுவலக ஊழியர்கள் தொடர்ந்து பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இதற்கு ஆதரவாக நுவரெலியா தபால் ஊழியர்களும் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளமை காரணமாக நுவரெலியா பிரதான தபால் நிலையம் முழுமையாக செயலிழந்து காணப்படுகின்றது.

இதனால் நுவரெலியாவிற்கு வருகைதரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் ஏராளமானோர் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட பழமையான கட்டிடத்தினை முழுமையாக பார்வையிட முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.

தொல்பொருள் நினைவுச்சின்னமாக கருதப்படும் நுவரெலியா தபால் நிலையம் நகரத்தின் மையப்பகுதியில் அமைந்துள்ளது. இதனால் நுவரெலியாவுக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் இந்த தபால் நிலையத்தை பார்வையிடத் தவறாமல் செல்வார்கள். இதன் கட்டிடக்கலை மற்றும் வரலாற்று முக்கியத்துவம் காரணமாக இது ஒரு பிரபலமான சுற்றுலாத் தலமாக உள்ளது. வெளிநாட்டில் இருந்து வருகைதந்து பழமையான தபால் நிலையத்தினை பார்வையிட முடியாமல் இருப்பதால் கடும் அதிருப்தியை வெளியிடுகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *