மட்டக்களப்பு மாவட்டத்தில் உள சமூக ஆய்வு மேற்கொள்வது தொடர்பான கலந்துரையாடலானது மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் தலைமையில் பழைய மாவட்ட செயலகத்தில் இன்று (17) இடம் பெற்றது.
அகில இலங்கை ரீதியில் கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டத்தில் உளவளத்துனை அணுகுமுறை மற்றும் உளசமூக செயற்பாடுகள் தொடர்பாக இலங்கை மற்றும் யப்பான் நாட்டு அனுகுமுறையையுடன் ஒப்பிட்டு ஆய்வு முறையை மேற்கொள்வதற்கு டோக்கியோ பல்கலைக்கழக பேராசிரியர் மிச்சிகோ ஸ்கிக் அவா மேற்கொண்டார்.
யப்பான் நாட்டில் பெற்றுக்கொள்ளப்பட்ட உளசமூக ஆய்வுகளையும் இலங்கையில் காணப்படும் உளசமூக ஆய்வு முறைகளையும் ஆய்வு செய்து பாடசாலை மாணவர்களின் ஆற்றல்களை மேம்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளது.
இந் நிகழ்வில் 250 வருடம் பழைமை வாய்ந்த யப்பானிய புகழ்பெற்ற நாடக கலைஞரின் ஓவியம் நினைவுச்சின்னமாக அரசாங்க அதிபரிடம் கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்
