கிழக்கு மாகாண பாலர் பாடசாலை கல்விப் பணியகத்தின் தலைமைக் காரியாலயத்தை மட்டக்களப்பிலிருந்து அகற்றுவதை எதிர்த்து இன்று(09) மட்டக்களப்பு காந்திப் பூங்கா முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
மட்டக்களப்பு மாவட்ட வலயங்களின் முன்பள்ளி ஆசிரியர்களின் ஏற்பாட்டில் குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
நூற்றுக்கணக்கான முன்பள்ளி ஆசிரியர்கள் இதில் பங்கேற்றனர்.
இதன்போது பதாகைகள் ஏந்தி, கோஷங்கள் எழுப்பிய அவர்கள் தங்களின் எதிர்ப்பினை வெளிப்படுத்தினர்.
மேலும், மகஜர் ஒன்று மட்டக்களப்பு அரசாங்க அதிபர் ஊடாக ஆளுநருக்கு கையளிக்கப்பட்டள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.


