அம்பாறை மாவட்ட திருக்கோவில் பிரதேச பெரும்போக பயிர்ச்செய்கைக்கான ஆரம்பக் கட்ட பொதுக்கூட்டம் நேற்று(10) பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் திருக்கோவில் பிரதேச செயலாளர் திரு. தங்கையா கஜேந்திரன் தலைமையில் இடம்பெற்றது.
2025.10.25 தொடக்கம் 2025.11.10 வரை விதைப்பு கால எல்லை குறிக்கப்பட்டுள்ளது.
இவ் ஆரம்பக்கட்டக் கூட்டத்தில் பிரதேச செயலாளர் திரு. ரி. கஜேந்திரன், உதவி திட்டமிடல் பணிப்பாளர் திருமதி. அனோஜா உஷாந்த், தம்பிலுவில் நீர்ப்பாசன அலுவலக பொறியியலாளர் ராஜேஷ்கன்னா, கால்நடை வைத்திய அதிகாரி, திருக்கோவில் பொலிஸ் நிலைய பிரதம பொலிஸ் பரிசோதகர் திரு. பீரிஸ், தம்பிலுவில் கமநல சேவை பொறுப்பு உத்தியோகத்தர் திரு. கே. மனோகாந்தன், கிராம நிர்வாக உத்தியோகத்தர் திரு. எஸ். சுயகுமார், கிராம சேவை உத்தியோகத்தர்கள், தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள், விவசாய அமைப்புக்கள், கால்நடைப் பண்ணையாளர்கள் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இதன் போது தம்பிலுவில் கமநல சேவை திணைக்களத்தினால் வயல் நிலங்களை உழுதலுக்கான சிறந்த கலப்பை பற்றிய விளக்கங்களும், வயல் நிலங்கள் பராமரிப்பு பற்றிய விளக்கங்களும் வழங்கப்பட்டது.


