கடந்த நாற்பத்தி மூன்று வருடங்களாக தொடர்ந்து எழுதிவரும் கவிஞர் ஜவ்பர்கான் கவிஞராக, சிறுகதையாசிரியராக, நாடக எழுத்தாளராக, சிரேஷ்ட ஊடகவியலாளராக, யூடியூப்பராக, பேச்சாளராக இலக்கியம், ஊடகம், அரசியல், பொதுப்பணி என பல்வேறு தளங்களில்
தொடர்ச்சியாக இயங்கிவரும் ஜவ்பர்கான் இதுவரை ஏழு நூல்களை வெளியிட்டுள்ளார்.
இலங்கை, இந்தியா, மலேசியா உட்பட பல நாடுகளிலும் இதுவரை 79 விருதுகளைப் பெற்றுள்ள கவிஞர் ஜவ்பர்கான் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் கடமை புரிந்ததுடன் முழுநேர ஊடகவியலாளராக பணியாற்றி வருகின்றார்.
ஊடகத்துறையில் பல உயர் விருதுகளைப்பெற்ற இவர் சத்தியம், கிழக்கு மண், வாரவலம் ஆகிய செய்திப்பத்திரிகைகளினதும் பிரதம ஆசிரியருமாவார்.
காத்தான்குடி இஸ்லாமிய இலக்கிய கழகத்தின் தலைவராக இருக்கும் இவர் கழகத்தினுடைய இதுவரை 17 நூல்களை வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
நாடெங்கிலுமுள்ள 50 தமிழ், முஸ்லிம் கவிஞர்களை ஒன்றிணைத்து ‘நதியைப்பாடும் நந்தவனங்கள்” என்ற கவிதை நூலை வெளியிட்டதுடன் 50 கவிஞர்களையும் ஒரே மேடையில் ஏற்றி பொற்கிழி வழங்கி கௌரவித்ததுடன் டொப் 100 காத்தான்குடி எனும் நிகழ்ச்சியினூடாக ஒரே மேடையில் 100 பல்துறையாளர்களுக்கு உயரிய விருது வழங்கி கௌரவித்து சாதனை படைத்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
தற்போது வாரவலம் எனும் யூடியூப் அலைவரிசையின் நிறுவனருமாவார்.


