மாவட்டத்தில் பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்படாத மேட்டு நிலங்களை அடையாளம் கண்டு அவற்றில் உணவுத் தேவைக்கான உளுந்து, பயறு, கெளப்பி, சோளம், நிலக்கடலை போன்ற பயிரினங்களை மேற்கொண்டு மாவட்டத்தின் உணவுத் தேவையைப் பூர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதுடன் ஏனைய அபிவிருத்தித்திட்டங்கள் தொடர்பாகவும் கவனம் செலுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
இந் நிகழ்வில் மாவட்ட விவசாய பணிப்பாளர் எம்.எப்.ஏ.சனிர், பிரதேச செயலாளர்கள், கமநல சேவைகள் திணைக்கள பிரதி ஆணையாளர் ஜேகன்நாத், விவசாய அமைச்சினால் நியமிக்கப்பட்ட மாவட்ட பிரதிநிதி கிருஸ்ணகோபால் திலங்கநாதன், பிரதேச ரீதியிலான பிரதிநிதிகள், திணைக்களத் தலைவர்கள் மற்றும்உயர் அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர்.


